அஜித் ரசிகர்களே இதை எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள்..

அஜித் ரசிகர்களே இதை எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள்..
  • PublishedMarch 4, 2026

வருகிற மே 1 ம்  திகதி அஜித்தின் பிறந்தநாளன்று அவரின் புதிய படம் வெளியாகவுள்ளது என்ற தகவல் ,தற்போது அஜித் படம் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

அஜித்தின் கார் ரேஸ் தொடர்பான ஆவண படத்தை இயக்குனர் ஏ.எல் விஜய் கடந்த சில மாதங்களாக உருவாக்கி வந்தார்.ஒரு கட்டத்தில் இதை சினிமாவை போல உருவாக்கிவிட்டார்களாம். இப்போது திரை அரங்கிலேயே வெளியிடலாம் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்களாம்.. மேலும் தற்போது இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் பின்னணி இசை அமைத்து வருவதாக கூறப்படுகிறது .

மற்றும் சிவகார்த்திகேயன், நயன்தாரா, விக்னேஷ் சிவன், யுவன் சங்கர் ராஜா, மாதவன், சிம்பு உள்ளிட்ட பலரும் அந்த படத்தில் அஜித்தை பற்றி பேசுவது போல காட்சிகளை எடுத்துள்ளனராம்.

எனவே மே 1ஆம் திகதி அஜித்தின் கார் ரேஸ் தொடர்பான படம் அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *