இயக்குநர் தமிழ்தான் ஆனால் படம் பாலிவுட்.
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விஜய் சேதுபதி ஒரு படம் நடிக்கவுள்ளதாகவும் இதில் நாயகியாக ஷ்ரதா கபூரும் வில்லனாக சஞ்சய் தத்தும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. மேலும் மும்பையை சேர்ந்த ஒரு தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிக்க முன்வந்ததாகவும் தமிழ் மற்றும் இந்தியில் இப்படம் படமாக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த தகவல் தற்போது கிட்டத்தட்ட உறுதி என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் மகிழ் திருமேனி கடைசியாக அஜித்தை வைத்து ‘விடாமுயற்சி’ படத்தை இயக்கியிருந்தார். அதைத் தொடர்ந்து இப்படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.