விஜய் பற்றி மமிதா பைஜூ பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்.

விஜய் பற்றி மமிதா பைஜூ பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்.
  • PublishedFebruary 18, 2026

மலையாள சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி, தற்போது தமிழ் சினிமாவிலும் பட்டையைக் கிளப்பி வருபவர் நடிகை மமிதா பைஜூ. கடந்தாண்டு வெளியான டியூட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த மமிதா பைஜூக்கு, தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து நடிகர் விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரைத்துறைக்கு அறிமுகமாகிய சில ஆண்டுகளிலேயே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் மமிதா பைஜு நடித்துள்ளார் .விஜயுடன் ‘ஜனநாயகன்’, சூர்யாவுடன் ‘கருப்பு’ மற்றும் தனுஷுடன் ‘கர’ ஆகிய திரைப்படங்களில் நமீதா பைஜூ நடித்துள்ளார். இந்த மூன்று திரைப்படங்களும் இன்னும் திரைக்கு வராத நிலையில், அனைத்து படங்களும் வெற்றி படங்களாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை சமீபத்தில் விருது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மமிதா பைஜூ, நடிகர் விஜய் பற்றி பேசி இருப்பது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் விஜய் குறித்து மமிதா பேசுகையில், “ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு எப்போதுமே நேரம் தவறாமல் விஜய் சார் வந்து விடுவார். பேசுவதற்கு சற்று தயங்கினாலும், மிகவும் இனிமையாக பேசுவார். நாம் அவரிடம் சொல்கின்ற சிறிய விஷயங்களை கூட நினைவில் வைத்துக் கொண்டு, மீண்டும் நம்மை சந்திக்கும் போது அதைப்பற்றி கேட்பார்.

எனக்கெல்லாம் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்ததே நினைவில் இருக்காது. ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்ததை கூட நினைவில் வைத்துக் கொண்டு, விஜய் சார் என்னிடம் கேட்டிருக்கிறார். மதிய உணவிற்கு விஜய் சாலமீனை விரும்பி சாப்பிடுவார். என்று மமிதா கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *