ஷங்கரின் நீண்ட நாள் கனவு திரைப்படத்தில் நடிகர் தனுஷ்.
இந்திய சினிமாவின் ‘பிரம்மாண்டம்’ என்று அழைக்கப்படும் இயக்குநர் ஷங்கர், தனது நீண்ட காலக் கனவுத் திரைப்படமான ‘வேள்பாரி’ க்காக தேசிய விருது நாயகன் தனுஷை அணுகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வீரயுக நாயகன் வேள்பாரி என்ற நாவல், தமிழ் இலக்கிய உலகில் ஒரு மைல்கல். சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த குறுநில மன்னன் பாரியின் வீரத்தையும், கொடையையும் பேசும் இந்த நாவலைத் திரைப்படமாக்க வேண்டும் என்பது ஷங்கரின் பல ஆண்டுக்காலக் கனவு. கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்த நாவலை வாசித்த ஷங்கர், அப்போதே இதனை மூன்று பாகங்களாக எடுக்க முடிவு செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
எந்திரன் படத்திற்குப் பிறகு இதுவே தனக்கு மிகப்பெரிய கனவுப் படம் என்று ஷங்கர் பல மேடைகளில் குறிப்பிட்டிருந்த நிலையில். தற்போது இதற்கான முதற்கட்டப் பணிகள் தீவிரமடைந்துள்ளதாகவும் படப்பிடிப்பை 2026-ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.