தளபதி இல்லாம தீபாவளியா?? விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

தளபதி இல்லாம தீபாவளியா?? விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
  • PublishedOctober 19, 2025

தீபாவளி என்றால் தல தீபாவளி, தளபதி தீபாவளி என்ற காலம் தற்போது மலையேறி போய் விட்டது. எந்த ஒரு பணிடிகைக்கும் இனி நாம் தளபதி படத்தை எதிர்பார்க்கவே முடியாது.

விஜய் சினிமாவையே விட்டு விலக முடிவு செய்ததுதான் இதற்கு காரணம். இந்த நிலையில், சோகத்தில் உள்ள விஜய் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் செய்தி வந்துள்ளது.

அதாவது லியோ திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகளாகும் நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது.

2023 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை லியோ திரைப்படம் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, கவுதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவையொட்டி படப்பிடிப்பு தள காட்சிகளை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அமைதியாக இருப்பதற்கு சரண்டர் என்று பொருள் கிடையாது என்றும், வெற்றி வாகை சூடுவதற்கு முன்பான அமைதியே இது போன்ற வசனங்கள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *