Birth Day Boy பிரபாஸுக்கு 230 அடி உயர கட் அவுட்
பாகுபலி படம் மூலம் உலகளவில் பிரபலமான நடிகர் பிரபாஸ் இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பிரபாஸின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் ஹைதராபாத்தின் குக்கட்பல்லியில் 230 அடி உயர பிரம்மாணட் கட் அவுட்டை வைத்துள்ளனர்.
2002 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஈஸ்வர் என்கிற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியவர் நடிகர் பிரபாஸ். 2004 ஆம் ஆண்டு வெளியான வர்ஷம் படத்தின் வெற்றியின் மூலம் தெலுங்கு சினிமாவில் அங்கீகரிக்கப் பட்ட நடிகராக உருவானார்.
இதனைத் தொடர்ந்து சத்ரபதி, புஜ்ஜிகாடு, பில்லா, டார்லிங், மிஸ்டர் பர்ஃபெக்ட், மிர்ச்சி உள்ளிட்டப் படங்களில் கதாநாயகனாக நடித்த பிரபாஸ் தனது நடிகர் பயணத்தில் அனைவராலும் பாராட்டப் படும் ஒரு நடிகராக இருந்துள்ளார்.
இதுவரை ஹீரோவாக இருந்த அவரது திரைப் பயணம் சூப்பர்ஹீரோவாக மாறியத் தருணம் என்றால் ராஜமெளலி இயக்கிய பாகுபலி படத்தின் மூலமாக.
பாகுபலி படத்தில் அமரேந்திர பாகுபலி என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார் பிரபாஸ். படத்தில் மட்டுமில்லை நிஜ வாழ்க்கையிலும் சிறியவர்கள் முதல் பெரியவர்களால் கொண்டாடப் பட்ட இரு கதாபாத்திரமாக இருந்தது. இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக பிரபாஸை உயர்த்தியதும் பாகுபலி படம் தான்.
தொடர்ந்து பாகுபலி 2 படத்தில் நடித்தார் பிரபாஸ். வெறும் பத்து நாட்களில் 1000 கோடி வசூலை தொட்ட ஒரே இந்திய படம் பாகுபலி 2. அதே நேரத்தில் அதிக வசூல் ஈட்டிய இந்தியப் படங்களில் வரிசையில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது இந்தப் படம்.
இதனைத் தொடர்ந்து பிரபாஸ் நடித்த சாஹோ திரைப்படமும் மிகப்பெரிய வசூல் எடுத்தது. தமிழ் , தெலுங்கு, கன்னடம் , மலையாளம், இந்தி என் அனைத்து மொழிகளிலும் ரசிகர்களால் கொண்டாடப் பட்ட பிரபாஸ் பான் இந்திய நடிகராக உருவானார் என்பது குறிப்பிடத்தக்கது.