நடுவானில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு… மயிரிழையில் உயிர் தப்பிய ரஷ்மிகா

நடுவானில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு… மயிரிழையில் உயிர் தப்பிய ரஷ்மிகா
  • PublishedFebruary 18, 2024

நேஷனல் கிரஷ் நடிகை ராஷ்மிகா மந்தனா சென்ற விமானம் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவர் அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அதற்காக மும்பை வந்த ராஷ்மிகா, அதன் ஷூட்டிங்கிலும் பங்கேற்றார்.

இதையடுத்து மும்பையில் இருந்து ஐதராபாத் கிளம்பிய ராஷ்மிகா, தன்னுடைய விமான பயணம் குறித்து ஒரு பகீர் சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

மும்பையில் இருந்து ஐதராபாத் கிளம்பிய விமானத்தில் நடுவானில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால் அதிலிருந்த பயணிகள் பதற்றம் அடைந்தனர்.

ஆனால் சாதுர்யமாக செயல்பட்ட விமானி, விமானத்தை மீண்டும் மும்பைக்கே திருப்பி கொண்டு சென்று அவசர அவசரமாக தரையிறக்கினார்.

இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதில் அனைவரும் எந்தவித காயமுமின்றி உயிர்தப்பினர்.

இச்சம்பவத்தின் போது விமானத்தில் நடிகை ஷ்ரத்தா தாஸ் உடன் தான் பயணித்ததாக குறிப்பிட்டுள்ள ராஷ்மிகா, இப்படி தான் இன்று நாங்கள் உயிர்தப்பினோம் என இருவரின் காலை சீட்டின் மீது வைத்தபடி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு குறிப்பிட்டுள்ளார். ராஷ்மிகாவின் இந்த பதிவு இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *