ஆதித்த கரிகாலனின் மேக்கிங் வீடியோ வெளியீடு!

ஆதித்த கரிகாலனின் மேக்கிங் வீடியோ வெளியீடு!
  • PublishedMarch 24, 2023

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.

இந்த படத்தின் முதல் பாகம் வெற்றியடைந்த நிலையில், தற்போது இரண்டாவது பாகம் உருவாகிவருகிறது. வரும் ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி இரண்டாவது பாகம் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், இதன் பின்னணி வேலைகளில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவ்வவ்போது  சில காணொலி, போஸ்டர் என அப்டேட் கொடுத்து வருகிறார்கள். அந்தவகையில் அண்மையில் அகநக பாடலின் சிறு பகுதி வெளியாகி இருந்தது.

தற்போது ஆதித்த கரிகாலன் பற்றிய சில மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. விரையில் ட்ரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *