சினிமாவில் 65 வருடங்ளை கடந்து வந்த உலக நாயகன்… தக் லைஃப் கொடுத்த சர்ப்ரைஸ்

சினிமாவில் 65 வருடங்ளை கடந்து வந்த உலக நாயகன்… தக் லைஃப் கொடுத்த சர்ப்ரைஸ்
  • PublishedAugust 13, 2024

பிரபல நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் 65 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். தனது 6 வயதில் சினிமாவில் ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தின் மூலம் அறிமுகமானார்.

முதல் படத்திற்கே ஜனாதிபதியிடம் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான உயரிய விருதை பெற்ற கமல்ஹாசன், அதன் பிறகு பல மொழி திரைப்படங்களில் நடித்தார்.

சினிமாவில் அவர் அறிமுகமாகி 65 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு தக் லைஃப் படக்குழுவினர் அவரை கொண்டாடி வருகின்றனர்.

கே.பாலசந்தர் இயக்கத்தில் 1973இல் ‘அரங்கேற்றம்’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு கதாநாயகனாக பல மொழிகளில் நடித்தார். பாடகர், எழுத்தாளர், இயக்குநர், நடன இயக்குநர் என சினிமாவில் பலதுறைகளிலும் சகலகலா வல்லவனாக வலம்வந்தார் கமல்.

களத்தூர் கண்ணம்மா படம் தொடங்கி இதுவரை 233 படத்தில் நடித்து சினிமாவில் தன்னிகர் கலைஞராக இருக்கும் கமலஹாசனை தக் லைஃப் படக்குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் கை தட்டி வரவேற்று, சினிமாவில் அவரின் 65வது ஆண்டுக்கான வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். இதன் வீடியோக்கள் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பலரும் கமலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *