என்ன ஒரு பாடலுக்கு 75 கோடியா?? எந்த படம் தெரியுமா?
ராம் சரண் மற்றும் கியாரா அத்வானியின் பான் இந்தியா படமான கேம் சேஞ்சரின் பாடல்களை உருவாக்க தயாரிப்பாளர்கள் 75 கோடி ரூபாய் செலவிட்டுள்ளனர்.
சமீப காலமாக மெகா பட்ஜெட் படங்களின் ட்ரெண்ட் அதிகரித்து வருகிறது. அந்த படத்தின் காட்சிகள் மற்றும் பாடல்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்த தயாரிப்பாளர்கள் அதிக பணத்தை செலவிடுகின்றனர்.
ஆனால் இது பலமுறை தயாரிப்பாளர்களுக்கு கை கொடுக்கவில்லை என்றே சொல்லலாம். படம் படுதோல்வி அடைந்தது.
இதுபோன்ற படங்கள் தோல்வியடையும் போது, கதையில் கவனம் செலுத்துமாறு தயாரிப்பாளர்களுக்கு விமர்சகர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இந்நிலையில், அடுத்த மாதம் ஒரு மெகா பட்ஜெட் படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் பாடல்களுக்கு மட்டும் சுமார் ரூ.75 கோடி செலவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன