“எனக்கு 6 இல்லை 7 குழந்தைகள்” மார்தட்டும் 79 வயது ஹாலிவுட் நடிகர்

“எனக்கு 6 இல்லை 7 குழந்தைகள்” மார்தட்டும் 79 வயது ஹாலிவுட் நடிகர்
  • PublishedJanuary 30, 2024

ரேஜிங் புல், தி காட்பாதர் பார்ட் II, டாக்ஸி டிரைவர், குட் ஃபெல்லாஸ், ஐரிஷ்மேன் என பல படங்களில் நடித்தவர் ராபர்ட் டி நீரோ. இவர் 2 முறை சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வென்றுள்ளார்.

இந்த ஆண்டு நடைபெற உள்ள ஆஸ்கர் விருது விழாவில் ‘கில்லர்ஸ் ஆஃப் தி ஃபிளவர் மூன்’ படத்துக்காக சிறந்த துணை நடிகர் பிரிவில் நாமினேட் ஆகி உள்ளார்.

இவர் தற்போது ‘அபவுட் மை ஃபாதர்’ படத்தின் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவரது ஆறு குழந்தைகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், எனக்கு 6 இல்லை இப்பொழுது 7 குழந்தைகள் உள்ளன. 80 வயதில் மகளை வளர்ப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.

என் குழந்தையின் முகத்தை பார்க்கும் பொழுது என்னுடைய கவலைகள் அனைத்தும் மறைந்து விடுகின்றன. என்னால் முடிந்த வரை அவளுடன் நாட்களை செலவிடுவேன்.

நான் கவலைப்படும் விஷயங்கள் எல்லாம் அவளைப் பார்க்கும் பொழுது மறந்துவிடும். எனக்கு அதுவே அதிசயமானது. என்னால் முடிந்தவரை அவளை ரசிக்க விரும்புகிறேன்” என்று நெகிழ்ச்சியாகக் கூறியிருக்கிறார்.

ராபர்ட் டி நீரோவுக்கு ஏற்கனவே ட்ரேனா, ரஃபேல், ஜூலியன் மற்றும் ஆரோன் என்ற இரட்டையர்கள் எலியாட், ஹெலன் கிரேஸ் என ஆறு குழந்தைகள் உள்ளனர்.

தற்போது 7-வது குழந்தைக்குத் தந்தையான செய்தியை ராபர்ட் டி நிரோ சென்ற ஆண்டு மே மாதம் அறிவித்திருந்தார். அக்குழந்தையின் பெயர் கியா என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *