காதல் கணவரை பிரிந்தாரா சுவாதி? வாய்திறந்த நடிகை..

காதல் கணவரை பிரிந்தாரா சுவாதி? வாய்திறந்த நடிகை..
  • PublishedSeptember 5, 2023

ஜெய், சசிகுமார் நடிப்பில் 2008 -ம் ஆண்டு வெளியான சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் சுவாதி ரெட்டி.

முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களை கவர்ந்த இவர் இதையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வந்தார்.

சுவாதி ரெட்டி கடந்த 2018 -ம் ஆண்டு கேரளாவை சேர்ந்த விகாஸ் வாசுவை என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் ஸ்வாதி ரெட்டி தனது காதல் கணவரை விவகாரத்து செய்ய போகிறார் என சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி இருக்கிறது.

இதற்கு காரணம், ஸ்வாதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவரின் புகைப்படத்தை நீங்கியதால் இந்த மாதிரியான தகவல் பரவி வந்ததை அடுத்து சுவாதி ரெட்டி வாய்ந்திறந்திருக்கிறார்.

சமீபத்தில் கொடுத்த பேட்டியொன்றில் விவாகரத்து செய்து கொண்டது உண்மையா என்ற கேள்விக்கு, சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றும் ஒருவேளை ஏதாவது இருந்தால் நானே அதை என்ன என்று சொல்லுவேன் என்று மழுப்பலாக சிரித்தபடி பதிலளித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *