’லியோ’ படத்தின் ஆச்சரியமான அப்டேட்டுகள் அடுத்த வாரம் வரும் – அனிருத்

’லியோ’ படத்தின் ஆச்சரியமான அப்டேட்டுகள் அடுத்த வாரம் வரும் – அனிருத்
  • PublishedSeptember 9, 2023

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’லியோ’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்டமாக இந்த படத்தின் ப்ரோமோஷன் பணியை தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

ஏற்கனவே இந்த படத்தின் சிங்கிள் பாடலான ’நா ரெடி’ என்ற பாடல் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலான நிலையில் அடுத்த சிங்கிள் பாடல், இசை வெளியீட்டு விழா, ட்ரைலர் ரிலீஸ் விழா உள்பட ப்ரமோஷன் பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ திரைப்படம் இன்று வெளியாகி இருக்கும் நிலையில் அட்லி மற்றும் அனிருத் ஆகிய இருவரும் ரோகிணி திரையரங்கில் படம் பார்க்க வந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய போது ’லியோ’ படத்தின் அப்டேட் அடுத்த வாரம் வரும் என்றும் தற்போது நாங்கள் ‘ஜவான்’ படத்தின் கொண்டாட்டத்தில் உள்ளோம் என்றும் தெரிவித்தார்.

மேலும் ’லியோ’ படத்தின் அடுத்த சிங்கிள் ரிலீஸ் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அடுத்த வாரம் ’லியோ’ படத்தின் ஆச்சரியமான அப்டேட்டுகள் வரும் என்றும் தெரிவித்தார்.

இதனை அடுத்து ’லியோ’ 2வது சிங்கிள் திரைப்படம் பாடல் அடுத்த வாரம் வெளியாகும் என்றும் அதனை அடுத்து இசை வெளியீட்டு விழா தேதி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் ’லியோ’ படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *