தூக்கப்பட்டார் சிம்பு.. இணைக்கப்பட்டார் ஜெயம் ரவி… “Kamal 234” குறித்த புதிய செய்தி

தூக்கப்பட்டார் சிம்பு.. இணைக்கப்பட்டார் ஜெயம் ரவி… “Kamal 234” குறித்த புதிய செய்தி
  • PublishedSeptember 11, 2023

கமல் ஹாசனும், மணிரத்னமும் இணையும் படத்தில் ஜெயம் ரவியும் நடிப்பதாக புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.

விக்ரம் கொடுத்த வெற்றியின் உற்சாகத்தை அடுத்து சினிமாவில் மீண்டும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் கமல்.

அந்தவகையில் படங்களை தயாரிக்கவும் செய்யும் அவர் அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்திலும், ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

ஹெச்.வினோத் – கமல் படம் தொடர்பான வீடியோ சமீபத்தில் வெளியானது.

கமல் ஹாசனின் அடுத்தடுத்த படங்களில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இருப்பது அவரும் மணிரத்னமும் இணையும் படம்தான்.

ஏற்கனவே இவர்கள் இணைந்து காலத்தால் அழிக்க முடியாத க்ளாசிக்காக நாயகன் படத்தை கொடுத்தனர். எனவே இந்தப் படத்தின் மீதான ஆவல் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.

தற்போது திரைக்கதை எழுதும் பணியில் மணிரத்னம் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. இந்தச் சூழலில் இருவரும் இணையும் படத்தில் சிம்பு முக்கியமான ரோலில் நடிக்கிறார் என்று முதலில் கூறப்பட்டது.

ஆனால் அண்மையில் வெளியான தகவலின்படி சிம்பு நடிப்பதற்கு வாய்ப்பு இல்லை என கூறப்பட்டது. இந்நிலையில் இந்தப் படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியிருக்கிறது.

அதன்படி ஜெயம் ரவி முக்கியமான ரோலில் நடிக்கிறார் என கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் தெரிகிறது. இதற்கிடையே பிரபாஸ் நடிக்கும் கல்கி ஏடி 2898 படத்தில் வில்லனாகவும் கமல் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *