“மறக்குமா நெஞ்சம்” நடந்தது என்ன? ஏ.ஆர்.ரஹ்மான் விடுத்துள்ள வேண்டுகோள்
இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கிவிட்டு மைதானத்திற்குள் நுழைய முடியாமல் திரும்பிச் சென்றவர்கள், இ-மெயில் முகவரிக்கு டிக்கெட் நகலை அனுப்புமாறு ஏ.ஆர்.ரஹ்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மறக்குமா நெஞ்சம் என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
25,000 பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதுமட்டுமன்றி, அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் ரசிகர்கள் சிரமப்பட்டனர்.
இதையடுத்து ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் அளவுக்கு அதிகமான கூட்டம் அனுமதிக்கப்பட்டதா? என விசாரிக்க தாம்பரம் காவல் ஆணையர் உத்தவிட்டுள்ளார்.
இந்நிலையில், ரசிகர்களுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
அதாவது, “அன்புள்ள சென்னை மக்களே, இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கி ஒரு சில சூழ்நிலைகளால் மைதானத்திற்குள் நுழைய முடியாமல் போனவர்கள், தயவு செய்து உங்கள் டிக்கெட் வாங்கிய நகலை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் குறைகளுடன் பகிர்ந்து கொள்ளவும்.
உங்கள் குறைகளை எங்கள் குழு விரைவில் நிவர்த்தி செய்யும் ” என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/arrahman/status/1701121511736684911?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1701121511736684911%7Ctwgr%5E01f74eca7d57a52b7e95a9f975f4ac456ce432e1%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fttncinema.com%2Fkollywood%2Far-rahman-appeals-to-fans%2Fcid12161110.htm