நான்கு முன்னணி நடிகர்களுக்கு ரெட் கார்ட்… திரையுலகில் பெரும் பரபரப்பு
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காமல், நஷ்டம் ஏற்படுத்திய சில நடிகர்களுக்கு ரெட் கார்டு வழங்க தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டது.
மேலும் இந்த லிஸ்டில், தனுஷ், எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, அமலா பால், வடிவேலு, ஊர்வசி, சோனியா அகர்வால், அதர்வா உள்ளிட்ட 14 நடித்தார்கள் உள்ளதாக கூறப்பட்டது.
இப்படி பரவிய தகவலுக்கு விளக்கம் கொடுத்து நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் ,
“தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் இடையே நீண்டகாலமாக நல்லுறவு நிலவி வருகிறது. நடிகர்கள் நலனை, உரிமைகளை பாதுகாப்பது போலவே தயாரிப்பாளர்கள் நலனை கருத்தில் கொண்டே தென்னிந்திய நடிகர் சங்கம் செயல்பட்டு வந்து கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக இரு சங்கங்கள் இடையே மோதல் என்ற ரீதியில் ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் மூலமாக செய்திகள் பரப்பப்படுகின்றன.
தமிழ் திரைத்துறையின் முக்கிய சங்கங்களான தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கங்களுக்குள் இடையே எந்த மோதலும் இல்லை. நடிகர்களின் கால்ஷீட், புதிய ஒப்பந்தங்கள் குறித்து தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து சில புகார்கள் வந்தன. அதேபோல் நடிகர்கள் தரப்பிலும் சில பிரச்சினைகளை கூறியுள்ளனர்.
இவை வழக்கமாக இரு தரப்பிலும் எழக்கூடிய, பேசினால் தீர்ந்து விடக் கூடிய பிரச்சினைகள்தான். ஆனால் ஒரு தரப்பு வாதங்களை மட்டுமே மையமாக வைத்து செய்திகள் பரவுவது வருத்தம் அளிக்கிறது.
இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை மிக சுமூகமாக நடைபெற்று வருகிறது. அனைத்து பிரச்சினைகளும் விரைவில் களையப்படும். என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நடிகர்களின் தரப்பில் உள்ள விளக்கங்களை கேட்ட பின்னர் தற்போது, 4 முன்னணி நடிகர்களுக்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்ட் வழங்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சிம்பு மீது ஏற்கனவே பலமுறை புகார் அளித்து பேச்சு வார்த்தை நடத்தி முடிவடையாத மைக்கேல் ராயப்பன் பிரச்சனையை, மேற்கோள்காட்டி சிம்புக்கு ரெக்கார்ட் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து, நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தபோது… நடிகர் சங்க பணத்தை முறையாக கையாளாது தொடர்பாக விஷாலுக்கு ரெட் கார்ட் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷ் தேனாண்டாள் முரளி தயாரிக்கும் படத்தில் ஏற்கனவே 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில், 20 சதவீத படப்பிடிப்புக்கு வராமல் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக ரெக்கார்ட் போடப்பட்டுள்ளது..
நடிகர் அதர்வா, தயாரிப்பாளர் மதியழகன் கொடுத்த புகாரில், முறையாக பதிலளிக்காமல் தொடர்ந்து நழுவி வருவதால் அதர்வாவுக்கும் ரெக்கார்ட் வழங்க பட்டுள்ளது. இந்த சம்பவம் தென்னிந்திய திரையுலகில் பரபரப்பை ஏற்புடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.