ரஜினி – லோகேஷ் கூட்டணி பற்றி பொது மேடையில் பேசிய கமல்… என்ன சொன்னார் தெரியுமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’தலைவர் ’171’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் குறித்த தனது கருத்தை உலகநாயகன் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நேற்று நடந்த திரைப்பட விருது வழங்கும் விழாவில் ’விக்ரம்’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக கமல்ஹாசனுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.
இந்த விழாவில் ’என்னுடைய ரசிகராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் எனது நெருங்கிய நண்பரான சூப்பர் ஸ்டார் அவர்களின் படத்தை இயக்குவது எனக்கு பெருமை தான் என்று தெரிவித்தார்.
மேலும் எனக்கும் நண்பர் ரஜினிக்கும் இடையே கண்டிப்பாக தொழில் போட்டி இருக்கும், ஆனால் எந்த நேரத்திலும் துரோகம் இருந்ததில்லை, எங்களிடையே இருந்த புரிதல் தான் நாங்கள் இருவரும் இந்த தொழிலில் வளர உதவியது என்று கூறினார்.
மேலும் ரஜினி கமல் நட்பு போன்று முந்தைய தலைமுறையில் யாரும் இல்லை என்பதை நான் பெருமையாக கூறுவேன் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் மணிரத்னம் அவர்களுடன் மீண்டும் இணைந்து உருவாக்கப்பட்ட உள்ள ’கமல்ஹாசன் 234 ’படம் குறித்து கருத்து கூறிய அவர் ’நாங்கள் ’நாயகன்’ படத்தில் எப்படி வேலை செய்தோமோ. அதே உற்சாகத்துடன் இந்த படத்திற்காகவும் பணிபுரிய உள்ளோம். இந்த படத்திற்காக நான் நீண்ட தாடி வளர்க்கிறேன், அதுதான் முக்கிய அப்டேட்’ என்று தெரிவித்தார்.
When #Leo updates are the hottest topic now, current most sensational director #LokeshKanagaraj proves himself to be a #KamalHaasan veriyan asking for #KH234 update 👌🔥https://t.co/Xcl7gZ5bbg
— VCD (@VCDtweets) September 17, 2023