இணையத்தை தெறிக்கவிடும் சந்திரமுகி 2 படத்தின் புதிய ட்ரெயிலர்

இணையத்தை தெறிக்கவிடும் சந்திரமுகி 2 படத்தின் புதிய ட்ரெயிலர்
  • PublishedSeptember 23, 2023

நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், லட்சுமி மேனன், ராதிகா சரத்குமார் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் சந்திரமுகி 2.

இந்தப் படம் முன்னதாக கடந்த வாரத்திலேயே வெளியாகவிருந்த நிலையில் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது.

முன்னதாக ரஜினி, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான சந்திரமுகி 2 படம் மிகப்பெரிய ஹிட்டடித்த நிலையில் சந்திரமுகி 2 படமும் ரசிகர்களை சிறப்பாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், லட்சுமி மேனன், மஹிமா நம்பியார், வடிவேலு உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ரிலீஸ் கடந்த வாரத்திலேயே திட்டமிடப்பட்ட நிலையில், படத்தின் சில வேலைகள் பாக்கியிருந்ததால் படத்தின் ரிலீஸ் இம்மாதம் 28ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் பிரமோஷன்களில் படக்குழுவினர் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த படத்தின் இசை வெளியீட்டில் நடிகர் லாரன்ஸ், கங்கணா ரனாவத், இயக்குநர் வாசு, மஹிமா நம்பியார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

இதனிடையே இந்தப் படத்தின் இரண்டாவது ட்ரெயிலர் தற்போது வெளியாகி உள்ளது.

முதல் ட்ரெயிலர் வெளியாகி கலவையான விமர்னங்களை பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது ட்ரெயிலர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *