இலவசமாக திரையிடப்பட்ட ஜெயிலர் படம்.. சிங்கநடை போட்டு வந்த ரீல் ரஜினி

இலவசமாக திரையிடப்பட்ட ஜெயிலர் படம்.. சிங்கநடை போட்டு வந்த ரீல் ரஜினி
  • PublishedSeptember 24, 2023

ஜெயிலர் திரைப்படத்தின் 50-வது நாளை கொண்டாடும் விதமாக ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தினர் சுமார் 170-டிக்கெட்களை புக் செய்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரது குடும்பத்தினரை ஜெயிலர் திரைப்படத்தினை காணசெய்தனர்.

திரைப்படத்தினை திரையிடுருவதற்கு முன்பு ஜெயிலர் திரைப்படத்தின் கெட்டப்பில் வந்த ரஜினிகாந்த் ரசிகர் ஒருவர் ரஜினிகாந்த்-போல் செய்கைகள் செய்து திரையரங்கில் இருந்த மாற்றுத்திறனாளிகளை சந்தோஷபடுத்தினார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிகொண்டிருக்கும் ஜெயிலர் திரைப்படம் தூத்துக்குடியில் உள்ள ஸ்ரீ பாலகிருஸ்ணா திரையரங்கில் ஓடி கொண்டு இருக்கிறது.

இந்த திரைப்படத்தினை காண வந்த அனைத்து மாற்று திறனாளிகள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஸ்ரீ பாலகிருஸ்ணா திரையரங்கம் சார்பில் ஸ்னாக்ஸ் இலவசமாக வழங்கப்பட்டது.

நடிகர் ரஜினிகாந்த் போல் இருந்த அந்த ரசிகருக்கு மாற்றுதிறனாளிகள் கைகள் கொடுத்து வரவேற்றனர். பின்னர் இதனை தொடர்ந்து ஜெயிலர் திரைப்படம் மாற்றுதிறனாளிகளுக்கு திரையிடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *