“பயமும் இல்ல… பதுங்கவும் இல்ல” வைரலாகும் விஜய்யின் பதிவு

“பயமும் இல்ல… பதுங்கவும் இல்ல” வைரலாகும் விஜய்யின் பதிவு
  • PublishedSeptember 27, 2023

லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தான நிலையில், 9 ஆண்டுகளுக்கு முன் நடிகர் விஜய் போட்ட பதிவு வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்யுடன் திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், கவுதம் மேனன், சாண்டி மாஸ்டர், பிக்பாஸ் ஜனனி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான லியோ வருகிற அக்டோபர் 19-ந் தேதி பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளது.

லியோ பட ரிலீசுக்கு இன்னும் மூன்று வாரங்களே எஞ்சியுள்ளதால், அப்படத்தின் ஆடியோ லாஞ்சை செப்டம்பர் 30-ந் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர்.

இதற்கான ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், ரசிகர்களின் நலன் கருதி லியோ ஆடியோ லான்ச் ரத்து செய்யப்பட்டதாக நேற்று இரவு ஷாக்கிங் அறிவிப்பை படக்குழு வெளியிட்டு இருந்தது.

லியோ ஆடியோ லாஞ்ச் ரத்து செய்யப்பட்டதன் பின்னணியில் எந்தவித அரசியல் தலையீடும் இல்லை என படக்குழுவே தங்களது டுவிட்டில் குறிப்பிட்டு இருந்தாலும் அரசியல் நெருக்கடியின் காரணமாகவே இந்நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டதாகவே சமூக வலைதளங்களில் பேச்சு அடிபடுகிறது.

இது ஒருபுறம் இருக்க நடிகர் விஜய்க்கு ஆதரவளிக்கும் விதமாக எக்ஸ் தளத்தில் #WeStandWithLEO என்கிற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். அதுமட்டுமின்றி கடந்த 2014-ம் ஆண்டு விஜய் போட்ட எக்ஸ் தள பதிவு ஒன்றும் தற்போது வைரலாகி வருகிறது.

அதில் ரசிகர் ஒருவர், தலைவா நம்ம பயந்து ஒதுங்குரோமா, இல்ல பாய பதுங்குரோமா என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்த விஜய், பயமும் இல்லை, பதுங்கவும் இல்லை, அனுபவம் தேடுறோம் அவ்வளவுதான் என கூலாக ரிப்ளை செய்துள்ளார். விஜய்யின் இந்த பழைய பதிவு தற்போதைய சூழலுக்கு ஒத்துப்போவதாக கூறி ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *