லியோ ‘Badass’ ப்ரோமோ வீடியோ வெளியானது..

லியோ ‘Badass’ ப்ரோமோ வீடியோ வெளியானது..
  • PublishedSeptember 28, 2023

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் லியோ. உலகமெங்கும் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.

விஜய்யின் பிறந்த நாளான கடந்த ஜூன் 22 ஆம் தேதி லியோ படத்தின் முதல் சிங்கிளான ‘நான் ரெடி’ பாடலை படக் குழு வெளியிட்டது. இந்தப் பாடலை அனிருத் இசையில் நடிகர் விஜய், அனிருத், அசல் கோலார் ஆகியோர் பாடியுள்ளனர்.

பாடல் வரிகளை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். இப்பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் நேற்று லியோ படக்குழு இசை வெளியீட்டு விழா நடைபெறாது என்று தெரிவித்திருந்தனர்.

இது விஜய் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி இருந்தது.

இந்த நிலையில் விஜய் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக லியோ படத்தின் இரண்டாவது பாடலான படாஸ் (Badass) எனக் குறிப்பிட்டு ஒரு போஸ்டரை படக்குழு பகிர்ந்திருந்தது.

இதன் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. முதல் பாடலை எழுதிய விஷ்ணு எடவன் இந்த பாடலையும் எழுதியுள்ளார்.

அனிருத்தின் வாய்ஸில் வருகிறது. நிச்சயம் இந்த பாடலும் பெரிய ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *