ரன்பீர்கபூர் – ராஷ்மிகா நடித்துள்ள ‘அனிமல்’ பட டீசர் வெளியானது

ரன்பீர்கபூர் – ராஷ்மிகா நடித்துள்ள ‘அனிமல்’ பட டீசர் வெளியானது
  • PublishedSeptember 29, 2023

இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர்கபூர் நடித்துள்ள ‘அனிமல்’ படத்தின் டீசரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

ரன்பீர் கபூரின் பிறந்தநாள் சிறப்பாக, டீஸர் வெளியிடப்பட்டிருப்பது, ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யூகிக்க முடியாத கதைக்களத்தில் ரன்பீர் கபூர் நடித்துள்ள இந்த படத்தை, பூஷன் குமார் தயாரித்துள்ளார். அனில் கபூர், ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் மற்றும் திரிப்தி டிம்ரி ஆகிய நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ‘அனிமல்’ திரைப்படம் டிசம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *