தலைவர் 170 இல் இணைந்த இரண்டு கதாநாயகிகள்… லைக்கா வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதாவது ஜெயிலர் படத்தை தொடர்ந்து இப்போது ஜெய் பீம் இயக்குனர் டி ஜே ஞானவேல் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் ரஜினி தனது 170 படத்தில் நடிக்க இருக்கிறார்.
இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் இப்போது படத்தில் நடிக்க உள்ள கதாநாயகிகள் யார் என்ற விவரம் வெளியாகி இருக்கிறது.
ரஜினி தனது அடுத்தடுத்த படங்களில் பயங்கரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
இப்படத்தில் துசாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் நடிக்க உள்ளதாக லைக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த இரு நடிகைகளுமே துணிச்சலான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர்கள். அந்த வகையில் மாதவன் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இறுதிச்சுற்று படத்தில் ரித்திகா சிங் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
அதேபோல் துஷாரா விஜயன் நடிப்புக்கு சிறந்த தீனி போட்ட படம் சார்பட்டா பரம்பரை.
இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்திருந்தார். மேலும் இவர்கள் இருவரும் இப்போது தலைவர் 170 நடிப்பதால் கண்டிப்பாக வெயிட்டான கதாபாத்திரம் தான் இவர்களுக்கு கொடுக்கப்படும். மேலும் மற்ற பிரபலங்கள் யார் யார் இந்த படத்தில் இணைவார்கள் என்பது விரைவில் தெரியவரும்.