துள்ளி குதித்து பிரபாஸை அறைந்த ரசிகை.. இணையத்தில் லீக்காகி ட்ரெண்டாகும் வீடியோ

துள்ளி குதித்து பிரபாஸை அறைந்த ரசிகை.. இணையத்தில் லீக்காகி ட்ரெண்டாகும் வீடியோ
  • PublishedOctober 4, 2023

பிரபல நடிகர் பிரபாஸை ரசிகை ஒருவர் பொது இடத்தில் வைத்து கன்னத்தில் அடித்த வீடியோ ட்ரெண்டாகியுள்ளது.

தெலுங்கில் மட்டும் அறியப்பட்ட பிரபாஸ் ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தின் இரண்டு பாகங்கள் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டார்.

அந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பான் இந்தியா ஸ்டாராக வலம் வர ஆரம்பித்த அவர் கடைசியாக ஆதிபுருஷ் படத்தில் நடித்தார்.

பாகுபலி போல் நிச்சயம் இந்தப் படமும் தனக்கான அடையாளமாக மாறும் என்ற பெரும் நம்பிக்கையில் அவர் இருந்தார். ஆனால் அந்த படம் படு மோசமான தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் பொது இடம் ஒன்றில் பிரபாஸை பார்த்தார் ரசிகை ஒருவர். அவரிடம் சென்று தனக்கு உங்களுடன் செல்ஃபி எடுக்க ஆசை என்று கூறியுள்ளார்.

அதற்கு பிரபாஸும் சம்மதித்தார். செல்ஃபி எடுத்த அந்த ரசிகை கூடுதல் உற்சாகமடைந்து துள்ளி குதித்து பிரபாஸின் கன்னத்தில் செல்லமாக சின்னதாக ஒரு அடி அடித்துவிட்டு அங்கிருந்து சென்றார். அதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *