TTF வாசனின் பைக்கை எரிக்க வேண்டும்… யூடியூப் சேனலை மூட வேண்டும்… நீதிபதி அதிரடி

TTF வாசனின் பைக்கை எரிக்க வேண்டும்… யூடியூப் சேனலை மூட வேண்டும்… நீதிபதி அதிரடி
  • PublishedOctober 5, 2023

டிடிஎஃப் வாசன் தன்னைத்தானே புகழ் படுத்தி கொண்டு கூட்டத்தை சேர்த்து பல பிரச்சனைகளை செய்து வீடியோக்களை வெளியிடுவது என்று தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.

யூடியூப் என்ற ஒரு விஷயத்தை வைத்துக்கொண்டு இவர்கள் செய்யும் செயல்கள் மோசமானதாக இருந்து வருகிறது அதிலும் இந்த டிடிஎஃப் வாசன் ஒரு படி மேல்.

தன்னை தமிழ்நாட்டின் முக்கியமான ஒரு புள்ளி அடுத்து தமிழ் சினிமாவின் கதாநாயகன் விஜய் போல் வருவேன் என்று தன்னைத்தானே பெருமை படுத்திக் கொள்ளும் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவன் போல் சுற்றி வருகிறான்.

இவன் பைக் ஓட்டுவதை பார்த்து இவரது யூடியூப் சேனலுக்கு பல இளைஞர்கள் சிறார்கள் என்று 45 லட்சத்திற்கு மேல் பாலோ செய்து வருகிறார்கள்.

இதை பயன்படுத்தி இவன் தமிழ் சினிமாவிலும் நடிக்க தொடங்கினார்.

மேலும், ரோட்டில் சாகசம் காட்டுகிறேன் என்ற பெயரில் பெரிய விபத்தில் சிக்கினார்.

நல்லவேளை மற்றவர்களுக்கும் இந்த பிரச்சனை வராமல் இவனுக்கு மட்டும் அடிபட்டது. மூன்று லட்சம் மதிப்புள்ள பாதுகாப்பு உடை அணிந்திருந்ததால் இவன் பிழைத்துக் கொண்டான்.

வேறு எதுவாக இருந்தாலும் கண்டிப்பாக உடல் சிதறி இறந்து போயிருப்பார்கள். நான் சாகசம் காட்ட வில்லை விபத்து தான் ஏற்பட்டது. என்று பொய் சொல்லி வந்தான். ஆனால் இவன் மீது பல வருடம் காவல்துறை கடுப்பில் இருந்து வந்தது.

இதை பயன்படுத்தி இவனை கைது செய்து சிறையில் அடைத்தனர் இன்றுவரை நான்கு முறை ஜாமீன் கேட்டும் கொடுக்க முடியாது என நேரடியாக கூறிவிட்டனர் நீதிபதிகள்.

இது மட்டும் இல்லாமல் இவன் பயன்படுத்திய 20 லட்சம் பைக்கை எரிக்க வேண்டும். இவனது யூடியூப் சேனலை மூட வேண்டும். மறு ஆணை வரும் வரை இவனுக்கு லைசன்ஸ் கொடுக்கக் கூடாது.

இவனே பாலோ செய்து வரும் ரசிகர்கள் சிறார்கள் இவர்கள் வேகமாக பைக்கில் செல்வது, திருட்டுச் செயல்களிலும் ஈடுபடுவது என்று தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

இவன் நடிப்பதால் பைக் ஓட்டி சாகசம் செய்தால் நாமும் நடிக்கலாம் என்ற எண்ணத்தை பல பேருக்கு இவன் ஏற்படுத்தி உள்ளான்.

இதை எதையும் அனுமதிக்கவே கூடாது என்று காட்டமாக பேசி உள்ளனர் நீதிபதிகள். இவனைப் போல யாரும் இனிமேல் வரக்கூடாது யார் நினைத்தாலும் இவன் வெளியே வரக்கூடாது என்றும் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *