அஜித் ஆசையாய் கட்டிய வீடு… இடித்து தரைமட்டமாக்கிய அதிகாரிகள்.. காரணம் என்ன?

அஜித் ஆசையாய் கட்டிய வீடு… இடித்து தரைமட்டமாக்கிய அதிகாரிகள்.. காரணம் என்ன?
  • PublishedOctober 23, 2023

ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித் வீட்டின் சுற்றுச்சுவர் திடீரென இடிக்கப்பட்டுள்ளது ஏன் என்பது பற்றி மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் அஜித் வெளிநாட்டுக்கு சென்றுள்ள இந்த நேரத்தில், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு உள்ளது.

அப்பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம். அதன் காரணமாக அஜித்தின் வீட்டு சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நடிகர் அஜித் தன்னுடைய ஈஞ்சம்பாக்கம் வீட்டை கடந்த 2017-ம் ஆண்டு தான் புதுப்பித்தார். அப்போது நவீன வசதிகளுடன் ரிமோட் கண்ட்ரோல் உடன் கூடிய வீடாக இதனை மாற்றினார் அஜித்.

மேலும் இந்த வீட்டில் சகல வசதிகளும் இருக்கும்படி மாற்றி அமைத்து அதில் குடும்பத்துடன் குடியேறினார். இப்படி அஜித் ஆசை ஆசையாய் கட்டிய வீட்டின் சுற்றுச்சுவர் திடீரென இடிக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் அஜித் பல லட்சம் செலவழித்து கட்டிய அந்த பெரிய சுற்றுச்சுவர் இடிக்கட்டுள்ளதோடு, அஜித் வீட்டின் கேட்டும் அகற்றப்பட்டு இருக்கிறது. இதனால் அஜித் வீட்டில் உள்ளவர்கள் வேறு வழியில் சென்றுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

இந்த சாலை விரிவாக்க பணிகள் காரணமாக அப்பகுதியில் வசிப்பவர்கள் நேரடியாக கிழக்கு கடற்கரை சாலையை அடைய முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *