முதன் முறையாக கமலுடன் ஜோடி சேரும் நயன்தாரா… லேட்டஸ்ட் அப்டேட்
நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் கடந்த ஆண்டில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி இன்டஸ்ட்ரியல் ஹிட்டடித்துள்ளது. இந்தப் படம் கொடுத்த வெற்றியில் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் மிகப்பெரிய உற்சாகத்தில் உள்ளார் கமல்ஹாசன்.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகியுள்ளார். தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன், சிம்பு படங்களை தயாரிக்கவுள்ளார்.
நடிகராக தற்போது இந்தியன் 2 படத்தின் சூட்டிங்கை முடித்துள்ளார். தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது- படத்தின் டப்பிங் பணிகளும் ஒருபுறம் நடந்து வருகிறது. இதனிடையே விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் உற்சாகமாக பங்கேற்று வருகிறார் கமல்ஹாசன்.
இதனிடையே பிரபாஸ் வில்லனாக கமல்ஹாசன் கமிட்டாகியுள்ள கல்கி 2898 AD படத்தின் சூட்டிங்கும் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படத்திற்காக 20 நாட்கள் மட்டுமே கமல்ஹாசன் கால்ஷீட் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக தன்னுடைய தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகவுள்ள KH233 படத்தில் ஹெச் வினோத் இயக்கத்தில் இணையவுள்ளார் கமல்ஹாசன்.
குறுகிய கால தயாரிப்பாக உருவாகவுள்ள இந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் KH234 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் கமல்ஹாசன். 35 ஆண்டுகளுக்கு பிறகு இந்தக் கூட்டணி இணையவுள்ளதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்தப் படத்தின் டீசர் அடுத்த மாதம் கமல் பிறந்தநாளையொட்டி வெளியாகவுள்ளதாகவும் இதற்கான சூட்டிங்கில் நேற்றிலிருந்து கமல் பிசியாகியுள்ளது குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமலே நேரடியாக ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்தப் படத்தில் பிரபல நடிகை நயன்தாரா கமலுடன் இணையவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்னிந்திய அளவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள நயன்தாரா இதுவரை கமலுடன் இணைந்து நடிக்கவில்லை என்ற குறை இருந்தது.
இந்நிலையில் KH234 படத்தில் கமலுடன் நயன்தாரா இணைந்து நடிக்கவுள்ளது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. முன்னதாக இந்தப் படத்தில் கமலுடன் இணைந்து நடிக்க த்ரிஷா, வித்யா பாலன் போன்றவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஆனால் தற்போது நயன்தாரா இந்தப் படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சாத்தியமானால், இந்த காம்பினேஷன் சிறப்பாக அமையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.