அச்சு அசல் ரஜினியை போலவே இருக்கும் நபர்… வைரலாகும் வீடியோ…

அச்சு அசல் ரஜினியை போலவே இருக்கும் நபர்… வைரலாகும் வீடியோ…
  • PublishedOctober 25, 2023

அச்சு அசல் ரஜினியை போலவே இருக்கும் ஒரு நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் இருக்கும் நபர் ரஜினியை போலவே உடல் தோற்றத்துடன், தலையை கோதுவது, பேசுவது என ரஜினியை போலவே இருக்கிறார்.

ஒரு சில ரசிகர்கள், அவரை ரஜினி என நினைத்து பகிர்ந்து வருகின்றனர். ஆனால் அவர் ரஜினி இல்லை என்று சிலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

ரஜினியை போலவே இருக்கும் இந்த நபர் சுதாகர் பிரபு என்பதும் அவர் கேரளாவின் கொச்சியில் உள்ள ஒரு ஸ்டாலில் டீ விற்று வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது.

ஆனால் அதே நேரம் ரஜினிக்கும் அவருக்கும் உள்ள உருவ ஒற்றுமையை பார்த்து பலரும் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் அந்த நபர் இணையத்தில் ஓவர்நைட்டில் சென்சேஷனாக மாறி உள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *