விஜய் மகளின் ரியல் தந்தை வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு
லியோ படத்தில் விஜய்க்கு மகளாக நடித்த இயல் குறித்து அவர் ரியல் தந்தை அர்ஜுனன் ட்வீட் செய்திருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் கடந்த 19ஆம் தேதி வெளியானது. பெரும் எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தியது.
படத்தின் கதையும், திரைக்கதையும் விமர்சனத்தை சந்தித்தாலும் விஜய்யின் நடிப்பை பலரும் கொண்டாடிவருகின்றனர். நடுத்தர வயது தந்தையாக விஜய் தனது பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
Thank you #TeamLEO you took care of her very well. made her feel very comfortable and safe. Thank you @actorvijay Sir for the amount of love and care you showed towards her.. IYAL had so many special lovable moments with you. hope she dint trouble u a lot. #ilaniyal @ilan_iyal pic.twitter.com/p3H1nOdxjz
— Arjunan Actor (@arjunannk) October 24, 2023
இந்தப் படத்திலிருந்து விஜய்யை கழித்துவிட்டால் ஒன்றுமே கிடையாது என்று ரசிகர்கள் கூறுகின்றனர். அவர்களின் கூற்றுக்கேற்றபடிதான் விஜய்யின் நடிப்பும் இருந்தது.
குறிப்பாக படத்தில் விஜய்க்கு மகளாக நடித்திருக்கும் இயலுடன் விஜய் அவ்வளவு க்யூட்டாக நடித்திருந்தார்.
கரு கரு கருப்பாயி பாடலுக்கு தனது மகளுக்கு முன்பு விஜய் ஆடிய நடனமும், அந்த சீனில் இயலின் நடிப்பும் தியேட்டரில் வெகுவாகவே ரசிக்கப்பட்டது.
இந்த சூழலில் இயலின் ரியல் தந்தை நடிகர் அர்ஜுனன் விஜய் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் பதிவு ட்ரெண்டாகியுள்ளது.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “விஜய் சார் நீங்கள் அவள் மீது காட்டிய அக்கறைக்கும், அன்புக்கும் நன்றி. லியோ படத்தின் மூலம் உங்களுடனான பல சிறப்பான தருணங்கள் இயலுக்கு உண்டு. அவள் உங்களை அதிகம் தொந்தரவு செய்திருக்கமாட்டாள் என நம்புகிறேன்””என்று குறிப்பிட்டிருக்கிறார்.