இவர்களில் ரஜினிக்கு வில்லனாகப்போவது யார்? பட்டையை கிளப்பும் “தலைவர் 170”

இவர்களில் ரஜினிக்கு வில்லனாகப்போவது யார்? பட்டையை கிளப்பும் “தலைவர் 170”
  • PublishedNovember 3, 2023

சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்திற்கான ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளை லோகேஷ் தொடங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், தலைவர் 171 படத்தில் ரஜினிக்கு வில்லனாக யார் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி தலைவர் 171 படத்தில் ராகவா லாரன்ஸ் வில்லன் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி ராகவா லாரன்ஸிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில், சந்தானம் என்ற கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இதில் முதலில் நடிக்கவிருந்தது ராகவா லாரன்ஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் குறித்த படத்தில் ‘நான் ஈ’, படத்தின் மூலம் தமிழில் பிரபலமானவர் கிச்சா சுதீப் வில்லனாக நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

கன்னட திரையுலகில் முன்னணி கதாநாயகனான இவர், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *