“ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்துகொண்டால்…” வெடித்த சர்ச்சை… பெல்டி அடித்த ரசாக்
உலக அழகி ஐஸ்வர்யா ராய் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் ரசாக் பகிரங்க மன்னிப்பு கேட்டார்.
ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற போட்டிகளில் நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று லீக் சுற்றோடு வெளியேறியது பாகிஸ்தான் அணி. இதை தொடர்ந்து பாகிஸ்தான் அணி மீது கடுமையான விமர்சனங்கள் குவிந்தன.
இது குறித்து டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் ரசாக், அந்த காலங்களில் யூனிஸ் கான் ஒரு கேப்டனாக ஒரு நல்ல எண்ணம் கொண்டிருந்தார்.
அது எனக்கு சிறப்பாக செயல்பட நம்பிக்கையை கொடுத்தது. உண்மையில், பாகிஸ்தானில் வீரர்களை உருவாக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் எங்களுக்கு இல்லை.
நீங்கள் ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்துகொண்டு ஒழுக்கமுள்ள குழந்தையை எதிர்பார்த்து விரும்பினால் அது ஒருபோதும் நடக்காது என்று சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து இருந்தார்.
இதைக்கேட்டு அருகில் இருந்த ஷாகித் அப்ரிடி மற்றும் உமர் குல் கூறியதைக் கேட்டு சிரித்தனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி இணையத்தில் அப்துல் ரசாக்கு எதிராக கண்டனம் குவித்தது.
அப்துல் ரசாக்கின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது யூசுப் தனது தோழரின் பேச்சை கடுமையாக கண்டித்ததோடு, “அவர் கூறியதற்கு வெட்கப்பட்டு மன்னிப்பு கேட்பார் என்று நம்புகிறேன்” என்று ட்வீட் செய்துள்ளார். மேலும்,ஷோயப் அக்தர், ‘எந்த பெண்ணையும் இப்படி அவமரியாதை செய்யக்கூடாது’ என்று ட்வீட் செய்ததோடு, ரசாக்கை உற்சாகப்படுத்தியதற்காக குல் மற்றும் அப்ரிடியையும் சாடினார்.
இதனையடுத்து, தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்ட அப்துல் ரசாக் நாங்கள் கிரிக்கெட் பயிற்சி குறித்து விவாதித்தோம். அப்போது ஐஸ்வர்யா ராயின் பெயரை தவறுதலாக நான் வாய் தவறி கூறிவிட்டேன். இதற்காக நான் அவரிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்கிறேன். யாருடைய மனதையும் காயப்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள் என்று பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.