20 வயது பாடகியுடன் இணையும் 44 வயது பிரேம்ஜி? கிடைத்தது பதிலடி..
இயக்குனரும் இசையமைப்பாளருமான கங்கை அமரனின் மகனாகிய பிரேம்ஜி தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி68 படத்தில் நடித்து வருகின்றார்.
44 வயதை தாண்டியிருக்கும் பிரேம்ஜி, இன்றுவரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார்.
சரக்கு பார்ட்டி என்று தன்னுடைய நண்பர்களுடன் நாட்களை கழித்தும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து நடிகைகளின் புகைப்படங்களுக்கு ஹாட்டின் விட்டும் வருகிறார்.
இந்நிலையில் புத்தாண்டு அன்று இந்த ஆண்டு நான் திருமணம் செய்து கொள்வேன், Dot என்று கூறியிருந்தார்.
தற்போது அவர் திருமணம் செய்யப்போகும் பெண் யார் என்று பலர் இணையத்தில் கசியவிட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன், 24 வயதான பாடகி வினைதாவை தான் திருமணம் செய்யப்போகிறார் என்று கூறியிருக்கிறார்.
ஆனால் இதுபற்றி வினைதா அவரது இணையத்தில் நான் திருமணம் செய்யவில்லை, Dotஎன்று கூறி பதிலடி கொடுத்திருக்கிறார்.