என்னடா இது? அயலானுக்கு வந்த சோதனை… கடைசி நேரத்தில் பிரச்சினை..
சிவகார்த்திகேயன் நடிப்பில் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அயலான் நாளை (ஜன.12) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதற்கான ஆன்லைன் புக்கிங்கும் தொடங்கிவிட்டது.
இந்நிலையில், கடைசி நேரத்தில் அயலான் ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தையில் சிவகார்த்திகேயன் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
2018ல் தொடங்கப்பட்ட அயலான் 5 ஆண்டுகளில் பல பிரச்சினைகளை கடந்து ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. 24 AM ஸ்டுடியோ சார்பில் ராஜா தயாரித்த இந்தப் படம் பட்ஜெட் பிரச்சினை காரணமாக பாதியிலேயே ட்ராப் ஆனது.
கொரோனா ஊரடங்கும் அயலான் படத்தை கிடப்பில் போட வைத்தது. அதன்பின்னர் கேஜேஆர் ஸ்டுடியோஸ் அயலான் படத்தை மீண்டும் கையில் எடுத்தது.
அதன்பின்னர் வேகமாக உருவான அயலான், கிராபிக்ஸ் வேலைகளுக்காக மட்டுமே இவ்வளவு தாமதமாக ரிலீஸாக உள்ளது. கடந்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்ட அயலான், பின்னர் கிராபிக்ஸ் பணிகளுக்காக பொங்கலுக்கு மாற்றப்பட்டது.
ஆனால், தற்போது கடைசி நேரத்தில் பொங்கல் ரிலீஸில் இருந்து அயலான் பின்வாங்கலாம் என தகவல்கள் வெளியாகின. சில தினங்களுக்கு முன் அயலான் படத்தின் ரிலீஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
அயலான் படத்தை தயாரித்த 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் நிறுவனம், டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் நிறுவனத்திடம் 10 கோடி ரூபாய் கடனாக பெற்றிருந்தது. இந்தத் தொகைக்கு பொறுப்பேற்றுக் கொண்ட கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ், 3 கோடி ரூபாய் மட்டுமே திருப்பி செலுத்தியது. மீதித் தொகையை கொடுக்காததால் அயலான் ரிலீஸுக்கு சென்னை நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்த பைனான்ஸ் பிரச்சினைகள் முடிந்துவிட்டதாக சொல்லப்பட்டது.
ஆனால், தற்போது ஃபைனான்ஸ் பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும், இதனால் அயலான் ரிலீஸ் ட்ராப் ஆகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், சிவகார்த்திகேயன் எப்படியாவது அயலான் படத்தை ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளாராம். அவரே களத்தில் இருந்து அயலான் பைனான்ஸ் பிரச்சினைகளை தீர்க்க போராடி வருவதாக சொல்லப்படுகிறது.
இன்னொருபக்கம் அயலான் ரிலீஸில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும், அது சொன்னபடி நாளை (ஜன.12) வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.