தக் லைஃப் படத்துல கமலுக்கு யாரு ஜோடி? அப்போ ஐஸ்வர்யா ராய் நிலை என்ன?
மணிரத்னம் அடுத்ததாக கமல்ஹாசனை வைத்து தக் லைஃப் படத்தை இயக்க ஆரம்பித்துள்ளார். எச். வினோத் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்கப் போவதாக அறிவித்திருந்த கமல்ஹாசன், தற்போது அஜித் போல அந்த படத்தை டிராப் செய்துவிட்டு தக் லைஃப் படம் பக்கம் வந்துவிட்டார்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள தக் லைஃப் படத்தில் த்ரிஷாவுடன் இணைந்து நயன்தாரா நடிக்க உள்ளார் என முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதன் பின்னர் இந்த படத்தில் நயன்தாரா நடிக்கவில்லை என்பது ஆன்போர்ட் அறிவிப்பு மூலமாக உறுதி செய்யப்பட்டது.
நடிகை திரிஷா இணைந்த நிலையில் நயன்தாராவுக்கு பதிலாக ஐஸ்வர்யா ராய் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் கடைசியில், ஐஸ்வர்யா ராய் நடிக்கவில்லை ஐஸ்வர்யா லட்சுமி தான் இந்த படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் லேட்டஸ்ட் அப்டேட்டாக, தக் லைஃப் படத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு ஜோடியே இல்லை என்கிற திடுக்கிடும் தகவல் தற்போது கசிந்து தீயாக பரவி வருகிறது.
தக் லைஃப் படத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவருக்குத்தான் இந்த படத்தில் திரிஷா ஜோடியாக நடிக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் நடிகர் ஜெயம் ரவிக்கு பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமி ஜோடியாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக பிரபல மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் நடிக்க உள்ளதாகவும் கூறுகின்றனர்.
இவர்களை தவிர்த்து மேலும் சில முக்கிய நடிகர்களும் தக் லைஃப் படத்தில் இடம் பெறுவார்கள் எனக் கூறுகின்றனர். இன்று தொடங்கியுள்ள தக் லைஃப் திரைப்படத்தின் படப்பிடிப்பு மூன்று மாதத்திற்குள் நிறைவடையும் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.