கட்சி பெயரில் இருந்த பிழைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் விஜய்..
கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலில் தீவிர ஆர்வம் காட்டி வந்த விஜய் கடந்த 2-ம் தேதி தனது கட்சியின் பெயரை தமிழக வெற்றி கழகம் என்று விஜய் அறிவித்தார்.
தேர்தல் ஆணையத்திலும் விஜய்யின் கட்சி பெயர் பதிவு செய்யப்பட்டது. மேலும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடாது எனவும் இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை என்றும் விஜய் கூறியிருந்தார்.
2026 தேர்தல் மக்கள் விரும்பும் அடிப்படை மாற்றத்திற்கு வழிவகுப்பது தான் தனது இலக்கு எனவும் கூறியிருந்தார்.
இதனிடையே தமிழக வெற்றி கழகம் பெயர் குறித்த சர்ச்சை தொடங்கியது. அதாவது தமிழக வெற்றிக்கழகமா அல்லது தமிழக வெற்றி கழகமா என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
தமிழறிஞர்களும், இலக்கியவாதிகளுக்கும் வெற்றி அருகே ‘க்’ என்ற ஒற்றெழுத்து வர வேண்டும் என்றும் தெரிவித்து வந்தனர்.
மேலும் விஜய்யின் கட்சியின் பெயரில் இலக்கண பிழை உள்ளது என்றும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார்லும் வெற்றிக் கழகம் என்று மாற்றி தான் பதிவு செய்ய வேண்டும் என்றும் பலரும் கருத்து பதிவிட்டு வந்தனர்.
இப்படி கட்சி தொடங்கிய உடனே பெயரில் உள்ள இலக்கண பிழை தொடர்பாக விமர்சனம் எழுந்தது. எனவே தனது கட்சி பெயரில் இலக்கண பிழையை திருத்த விஜய் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் விஜய் தனது கட்சி பெயரை தமிழக வெற்றிக் கழகம் என்று மாற்றி இலக்கண பிழையை சரி செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இனி தமிழக வெற்றிக்கழகம் என்றே கட்சியின் பெயரை எழுத வேண்டும் அக்கட்சி தலைமை நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. இதை தொடர்ந்து தற்போது தமிழக வெற்றிக்கழகம் என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது.
vi