விஜய் இல்லாம இது முழுமையடையாது.. விஷால் உருக்கம்
தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக நாசர் செயல்பட்டு வருகிறார், பொதுச்செயலாளராக விஷால் மற்றும் பொருளாளராக கார்த்தி செயல்பட்டு வருகின்றனர்.
இந்த சங்கத்திற்கான கட்டிடத்தை கட்டுவதற்காக கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் சங்க நிர்வாகிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் போதுமான நிதி இல்லாத காரணத்தால் இந்த சங்க கட்டுமான பணி தொடர்ந்து தள்ளி போய் வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த சங்க கூட்டத்தில் கட்டிடம் கட்டுவதற்காக 40 கோடி ரூபாய் வங்கியில் கடன் பெறுவதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வங்கிக்கடனை அடைப்பதற்கு கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அவற்றை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னதாக இந்த சங்க கட்டிடம் கட்டுவதற்காக நடிகர்கள் கார்த்தி, சூர்யா, விஷால் உள்ளிட்டவர்கள் நிதியுதவி அளித்திருந்தனர் இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசனும் ஒரு கோடி ரூபாய் கொடுத்திருந்தார்.
நடிகரும் அமைச்சருமான உதயநிதியும் இந்த சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய் முன்னதாக கொடுத்திருந்த நிலையில் நடிகர் விஜயும் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளார்.
ஒரு கட்டத்தில் விஷால் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த பின்பே தான் திருமணம் செய்து கொள்வேன் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த கட்டிடப் பணிகள் துவங்கப்பட்டு அடுத்தடுத்து கட்டிடம் குறித்த முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நடிகர் விஜய்யும் சங்க கட்டிட நிதியாக ஒரு கோடி ரூபாய் அளித்திருந்தார். இந்நிலையில் நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் விஜய்க்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.
Thank you என்ற இரண்டு வார்த்தைகள் மட்டுமே, ஆனால் ஒருவர் தன்னுடைய இதயபூர்வமாக உதவி செய்யும்போது அந்த வார்த்தைகள் வெளிப்படுத்தும் அர்த்தங்கள் அதிகம். என்னுடைய விருப்பத்திற்குரிய நடிகரான தளபதி விஜய் பிரதர் நடிகர் சங்க கட்டிட வேலைகளுக்காக ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளார். இதற்கு நன்றி. காட் பிளஸ் யூ விஜய் என்றும் விஷால் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, இந்த சங்க கட்டிடம் விஜய்யின் சப்போர்ட் இல்லாமல் முழுமையடையாது என்பது எங்களுக்கு தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கட்டிடம் முழுமையடைய விஜய் அளித்துள்ள நிதியுதவி தங்களுக்கு மிகப்பெரிய நம்பி
க்கையை கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ள விஷால், தற்போது விஜய்யின் ஸ்டைலில் கூற வேண்டும் என்றால் நன்றி நண்பா என்றும் தனது எக்ஸ் தள பக்கத்தில் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.