அஜித் தெலுங்கு தயாரிப்பாளரை தேடி ஓடியது 163 கோடிக்காகத்தானா? குட் பேட் அக்லி நியு அப்டேட்
நடிகர் அஜித்குமார் நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தில் ஹீரோயினாக திரிஷா நடிக்க, வில்லனாக ஆரவ் மற்றும் அர்ஜுன் நடிக்கின்றனர். படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.
விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் முன்னரே அஜித்தின் அடுத்த பட அப்டேட்டும் வெளியானது. அதன்படி அவரின் 63-வது படத்திற்கு குட் பேட் அக்லி என பெயரிடப்பட்டு உள்ளதாகவும், இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
மேலும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளதாகவும், தெலுங்கில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழில் நடிகர் அஜித்தின் கால்ஷீட்டுக்கு தயாரிப்பாளர்கள் வரிசையில் காத்திருக்கும் நிலையில், அவர் ஏன் தெலுங்கு தயாரிப்பாளர் பக்கம் சென்றார் என்பது கேள்விக்குறியாக இருந்த நிலையில், அதற்கு காரணம் சம்பளம் தான் என்கிற தகவல் தெரியவந்துள்ளது.
நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி பாத்துக்காக ரூ.105 கோடி சம்பளமாக வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் குட் பேட் அக்லி படத்துக்காக அவருக்கு ரூ.163 கோடி சம்பளம் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடாமுயற்சி படத்தைவிட ரூ.50 கோடிக்கு மேல் அதிக சம்பளம் கிடைப்பதால் தெலுங்கு தயாரிப்பாளர் பக்கம் அஜித் சென்றுவிட்டாராம். இதன்மூலம் கோலிவுட்டில் 150 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் அஜித்தும் இணைந்துள்ளார்.
இதற்கு முன்னர் விஜய், ரஜினி, கமல் மட்டுமே அந்த பட்டியலில் இருந்த நிலையில், தற்போது நடிகர் அஜித்குமாரும் அந்த எலைட் லிஸ்ட்டில் இணைந்துள்ளார். குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.