‘கல்கி’ ரிலீஸ் திகதியை அதிரடியாக அறிவித்தது படக்குழு

‘கல்கி’ ரிலீஸ் திகதியை அதிரடியாக அறிவித்தது படக்குழு
  • PublishedApril 28, 2024

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, திஷா பதானி, அமிதாப்பச்சன் மற்றும் சிறப்புத் தோற்றத்தில் கமல்ஹாசன் ஆகியோர் நடிக்கும் படம் ‘கல்கி 2898 ஏடி’.

மகாபாரத கதையை தழுவி சயின்ஸ் பிக்ஷன் கலந்த பிரமாண்ட படமாக பெரிய பட்ஜெட்டில் கல்கி படம் உருவாகிறது.

மேலும், இப்படம் மே 9ம் திகதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள்.

ஆனால் மே மாதம் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால், படத்தின் வசூல் பாதிப்படைய வாய்ப்புகள் அதிகம்.

எனவே, படம் மே 9ம் திகதி வெளியாகாது என்ற தகவல் பரவியது. இந்நிலையில் தேர்தல் முடிந்த பிறகு படத்தை வெளியிட முடிவு செய்த படக்குழு தற்போது ஜூன் 27ல் வெளியிடுவதாக புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.

அந்த போஸ்டரில் பிரபாஸ், அமிதாப் மற்றும் தீபிகா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *