தனது “கருமுட்டை”யை சேமித்து வைத்துள்ள பிரபல நடிகை.. காரணம் தெரியுமா?
குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு வரப்பிரசாதமாக வந்துள்ளதுதான் கருமுட்டையை சேமித்து வைப்பது. இதை பிரபல நடிகை ஒருவர் தனது திருமணத்திற்கு முன்பே கருமுட்டையை சேமித்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் பிறந்தவர் தான் நடிகை மெஹ்ரீன் பிர்சாதா. இவரின் தந்தை விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர், அம்மா இல்லத்தரசியாக உள்ளார். மாடல் அழகியான இவர் விளம்பரம் மற்றும் மாடலிங்கில் நடித்துள்ளார்.
மெஹ்ரீன் பிர்சாதா 2016 ஆம் ஆண்டு தெலுங்கு படமான கிருஷ்ண காடி வீர பிரேம காதாவின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார். இந்த படத்தில், நானிக்கு ஜோடியாக மகாலட்சுமி என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.
இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து, சூரஜ் ஷர்மாவுக்கு ஜோடியாக அனுவாக நடித்த ஹிந்தித் திரைப்படமான பிலௌரியில் நடித்தார்.
இந்தி, தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த இவர், நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக நடித்தார். சசீந்திரன் இயக்கத்தில் விக்ராந்த், மெஹ்ரீன் பிர்சாடா, சூரி, ஹரிஸ் உத்தமன் உள்ளிட்ட பலரும் நடித்த இப்படத்தை ஆன்டனி தயாரித்திருந்தார். இந்தபடமும் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் தோல்விப்படமாக அமைந்தது.
இதைத் தொடர்ந்து தனுஷ் நடித்த பட்டாஸ் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். இந்த படும் ஓரளவிற்கு ஓடியது.
நடிகை மெஹ்ரீன் பிர்சாதா, அளித்துள்ள பேட்டியில் கருமுட்டை குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார். அதில், நான் எப்போது திருமணம் செய்து கொள்வேன் என்று தெரியவில்லை. இதுவரை திருமணம் குறித்து எந்த முடிவும் எடுக்காததால், எனது கருமுட்டைகளை டாக்டர்கள் உதவியுடன் மருத்துவ ரீதியாக சேகரித்து பாதுகாப்பாக வைத்து இருக்கிறேன்.
இது என்னுடைய தனிப்பட்ட முடிவு தான். குழந்தை பிறப்பை தள்ளிப்போட நினைக்கும் பெண்களுக்கு இது ஒரு விழிப்புணர்வாக இருக்கும் என்றும் நடிகை மெஹ்ரீன் தெரிவித்துள்ளார்..