கீர்த்திக்கு அடித்த அதிஷ்டம்… என்ன பண்ணி இருக்காங்கனு தெரியுமா?

கீர்த்திக்கு அடித்த அதிஷ்டம்… என்ன பண்ணி இருக்காங்கனு தெரியுமா?
  • PublishedMay 20, 2024

மகாநடி பட இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில், இதிகாச கதையின் அடிப்படையில் உருவாகி வரும் திரைப்படம் ‘கல்கி 2898 A.D’. இந்த படத்தில் ‘பைரவா’ என்கிற பாத்திரத்தில் நடிக்கிறார் பிரபாஸ்.

சமீபத்தில் பிரபாஸின் ‘பைரவா’ தோற்றத்தின் புகைப்படத்தை பகிர்ந்திருந்தது படக்குழு.

இந்த படத்தை பிரமாண்ட பட்ஜட்டில் வைஜெயந்தி மூவீஸ் தயாரிக்கிறது, பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இந்த படம், புராணக் கதைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் நடக்கும் சயின்ஸ் பிக்சன் கதையாகும்.

இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால் நடிகையாக இல்லாமல் டப்பிங் ஆர்டிஸ்ட்டாக பணியாற்றி உள்ளாராம்.

இந்த படத்தில் பைரவாவின் நம்பிக்கைக்குரிய நண்பனாக புஜ்ஜி என்கிற ரோபோ நடித்து வருகிறது. இந்த ரோபோவுக்கு கீர்த்தி சுரேஷ் தான் டப்பிங் செய்துள்ளாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *