சிரஞ்சீவியை பார்க்க சர்ப்ரைஸ் விசிட் அடித்து திக்குமுக்காட வைத்த தல

சிரஞ்சீவியை பார்க்க சர்ப்ரைஸ் விசிட் அடித்து திக்குமுக்காட வைத்த தல
  • PublishedMay 29, 2024

நடிகர் அஜித்குமார் நடிப்பில் தற்போது குட் பேட் அக்லி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அப்படத்தை தயாரித்து வருகிறது.

நடிகர் அஜித்தின் 63-வது படமான இதன் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் அஜித் மூன்று வேடங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் ஸ்டூடியோ அருகில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் விஸ்வம்பரா படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வந்துள்ளது.

இதுபற்றி அறிந்த அஜித்குமார். ஷூட்டிங் இடைவேளையில் விஸ்வம்பர படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்து, அங்கு நடிகர் சிரஞ்சீவி மற்றும் விஸ்வம்பரா படக்குழுவையும் நேரில் சந்தித்து உள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *