பிரபல நடிகர் சுட்டுக் கொலை… வௌியான அதிர்ச்சித் தகவல்

பிரபல நடிகர் சுட்டுக் கொலை… வௌியான அதிர்ச்சித் தகவல்
  • PublishedMay 30, 2024

அமெரிக்க நடிகரான ஜானி வெக்டர் என்பவர் கடந்த வாரம் கார் திருடர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதில் அவரது உதவியாளர் மீதுதான் திருடர்கள் குறி வைத்துள்ளனர் என்றும், இதையறிந்த நடிகர் ஜானி, உதவியாளரை காப்பாற்ற நினைத்து முன்சென்ற நிலையில், அவரை துப்பாக்கிகள் துளைத்துவிட்டன என்றும் சொல்லப்படுகிறது.

ஊடகங்களின் தகவலின்படி நடிகர் ஜானி வெக்டர் கடந்த 25 ஆம் திகதி அதிகாலை முன்று மணிக்கு லாஸ் ஏஞ்சலில் உள்ள பார் ஒன்றிலிருந்து வெளியே வந்துள்ளார். பின் தனது கார் இருக்கும் இடத்திற்கு சென்றுள்ளார். அச்சமயம் முகமூடி அணிந்த திருடர்கள் மூவர், அவரது காரின் உபகரணங்களை திருட முயன்றுள்ளனர்.

அதை தடுக்க சென்ற சமயம் திருடன் ஒருவன் ஜானி வெக்டரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளான். அதில் காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இருப்பினும் அவர் அங்கு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இவரை சுட்டுக்கொன்ற நபர்களை பொலிசார் தேடிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *