அஜித் மகள் அனோஷ்காவா இது? லீக்கானது அந்த வீடியோ…

அஜித் மகள் அனோஷ்காவா இது? லீக்கானது அந்த வீடியோ…
  • PublishedJune 4, 2024

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். சமீப காலமாக அஜித்தின் பிள்ளைகள் குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் அதிகம் வெளியாகி வருகிறது. அஜித்தின் மனைவி ஷாலினியே சில வீடியோக்களை பகிர்ந்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதை வழக்காக வைத்துள்ளார்.

தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வரும் வீடியோ ஒன்றில்… அனோஷ்கா பொத்திக் ஒன்றில், தன்னுடைய பெண் தோழி ஒருவருடன் சேர்ந்து சில உடைகளை கையில் எடுத்து பார்த்து கொண்டிருக்கிறார்.

அப்போது அனோஷ்காவின் அனுமதி இன்றி வீடியோ எடுத்து கொண்டு மர்ம நபர் ஒருவர் உள்ளே வந்து எதோ சொல்ல… அனோஷ்காவும், அவரின் தோழியும் அங்கிருந்து பதறியபடி வெளியேறுவதை இந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வரும் நிலையில் இந்த வீடியோவுக்கு கண்டனங்கள் எழுப்பி வருகின்றனர் அஜித்தின் ரசிகர்கள்.

ஒரு பிரபலமான நடிகரின் மகளை அவருக்கு தெரியாமல், அவருடைய சம்மதம் இல்லாமல் வீடியோ எடுப்பது சட்டப்படி குற்றம். எனவே அந்த நபர் மீது தகுந்த எடுக்க வேண்டும் என கூறி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *