கல்கி 2898 ஏ.டி – டிரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு… எதிர்பார்ப்பு எகிறியது

கல்கி 2898 ஏ.டி – டிரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு… எதிர்பார்ப்பு எகிறியது
  • PublishedJune 5, 2024

பாகுபலி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் அமைத்துக் கொண்டவர் நடிகர் பிரபாஸ்.

இந்நிலையில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் “கல்கி 2898 ஏ.டி”. இப்படம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிற மற்றொரு காரணம் படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கின்றார் என்பதுதான். இந்நிலையில் படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

அடுத்ததாக படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதிதியை படக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, வரும் 10ஆம் தேதி படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகவுள்ளது என தெரிவிக்கப்பட்டிருப்பதால், ரசிகர்கள் செம குஷியாகியுள்ளனர்.

மேலும், 10ஆம் தேதியில் எந்த நேரத்தில் ரிலீஸ் ஆகும் என்பதை படக்குழு தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடவில்லை. ஏற்கனவே படக்குழு தரப்பில் படம் வரும் 27ஆம் தேதி ரிலீசாகவுள்ளது என தெரிவித்திருந்தது.

கல்கி 2898 ஏ.டி திரைப்படம் வரும் 27ஆம் தேதியும், இந்தியன் 2 திரைப்படம் ஜூலை மாதம் 12ஆம் தேதியும் ரிலீசாகவுள்ளதால், உலக நாயகன் கமல் ஹாசன் ரசிகர்களுக்கு மிகவும் பிரமாண்டமான திரை விருந்து காத்திருக்கின்றது என்றே கூறலாம்.

அதாவது கிட்டத்தட்ட இரண்டு வார இடைவெளியில் கமல் ஹாசன் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகவுள்ளதால் உலக நாயகனின் ரசிகர்கள் ஏகப்பட்ட குஷியில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *