‘உருகி உருகி போனதடி..” தமிழ் பாடலுக்கு அசத்தும் ஆப்பிரிக்க பழங்குடியினர்

‘உருகி உருகி போனதடி..” தமிழ் பாடலுக்கு அசத்தும் ஆப்பிரிக்க பழங்குடியினர்
  • PublishedJune 6, 2024

இன்ஸ்டாகிராமில் தனது ரீல்ஸ் மூலம் பிரபலமானவர் கிலி பால். இவர் கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள டான்சானியா நாட்டைச் சேர்ந்த பழங்குடியினர். இவர்கள் வசிக்கும் பகுதி மின்வசதி இன்றி இருப்பதால், தங்களது கைபேசியினை 10 கி.மீ வரை சென்று சார்ஜ் செய்து வருவார்கள்.

இவரும் இவரது சகோதரியும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தியப் பாடலுக்கு நடனமாடியும், பாடலுக்கேற்ப உதடுகளை அசைத்தும் பலரின் மனங்களை வென்று பல லட்சம் ஃபாலோவர்ஸ்களை கொண்டுள்ளனர்.

இவர்கள் தங்களது பாரம்பரிய உடையை அணிந்து வீடியோ செய்வதுதான் பலரின் கவனத்தை ஈர்ப்பதற்க்கு மிக முக்கிய காரணம்.

அந்த வகையில் கிலி பால் தற்போது தமிழ் பாடல் ஒன்றுக்கு ரீல் செய்துள்ளமை அனைவரையும் ஈர்த்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *