கோட் படம் குறித்து அதிகமா சொல்லப்போறேன்.. எதிர்பார்ப்பை தூண்டிவிட்ட மோகன்

கோட் படம் குறித்து அதிகமா சொல்லப்போறேன்.. எதிர்பார்ப்பை தூண்டிவிட்ட மோகன்
  • PublishedJune 6, 2024

நடிகர் விஜய் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் 90களின் வெள்ளிவிழா நாயகன் மோகன் வில்லனாக இணைந்துள்ளார்.

நீண்ட காலங்களாக நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த மோகன் தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் அவர் ஹீரோவாக நடித்துள்ள திரில்லர் படம் ஹரா ரிலீசாகவுள்ளதால் அந்தப் படத்தின் பிரமோஷன்களுக்காக பேசிய மோகன் விஜய்யின் கோட் படம் குறித்தும் சுவாரசியங்களை பகிர்ந்துள்ளார்.

இலங்கையில் நடந்துவந்த ஷெட்யூல் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்துள்ளதாகவும் இந்தப் படம் மிகச்சிறப்பாக வந்துள்ளதாகவும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்றும் கூறியுள்ளார்.

இந்த படத்தில் தான் இணைந்தது சூப்பர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படம் குறித்து அதிகமாக பேச முடியாது என்றும் படத்தின் ஷூட்டிங் இன்னும் சில தினங்களில் நிறைவடையுள்ள சூழலில் அதை தொடர்ந்து தயாரிப்பு தரப்பின் ஒப்புதலுடன் படம் குறித்து அதிகமாக பகிர்வேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

தொடர்ந்து அமைதியான நாயகனாகவே நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் மோகன் விஜய்க்கு வில்லனாக எப்படி அமைவார் என்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *