ஹாங் காங் டூர்… விக்கி – நயனுக்கு பிரச்னையை இழுத்துவிட்ட ஏர் இந்தியா… என்ன நடந்தது

ஹாங் காங் டூர்… விக்கி – நயனுக்கு பிரச்னையை இழுத்துவிட்ட ஏர் இந்தியா… என்ன நடந்தது
  • PublishedJune 6, 2024

தமிழ் சினிமாவில் போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன் பின்னர் நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், பாவ கதைகள் காத்து வாக்குல ரெண்டு காதல், போன்ற படங்களையும் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.

விஜய் சேதுபதியின் நானும் ரவுடிதான் படத்திற்காக நயன்தாராவுடன் பணியாற்றுகையில் அவருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாற இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்தனர். அவர்களுக்கு உயிர் மற்றும் உலக் என பெயர் வைத்துள்ளனர்.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சினிமா தயாரிப்புகளிலும் பிசியாக ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வளவு பிஸியாக இருக்கும் விக்னேஷ் சிவன் தனது மனைவி நயன்தாரா மற்றும் தனது குழந்தைகளுடன் ரிலாக்ஸாக இருக்க ஹாங்காங்கிற்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தார்.

அங்கு சென்று அவர்கள் அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வந்தனர். இதற்கு ரசிகர்களும் லைக்களையும் கமெண்ட்களையும் வாரி வழங்கி வந்தனர். இந்த பயணத்தின் போது தங்களது குழந்தைகளைக் கவனிக்க மூன்று செவிலியர்களையும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி அழைத்துச் சென்றதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் ஹாங்காங் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு இந்தியா திரும்புகையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதியினர் ஏர் இந்தியா நிறுவன விமானத்தில் தங்களுக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்ததாக தெரிகிறது.

ஏர் இந்தியா தரப்பில் ஏதோ சில தவறுகள் நடக்க அதனை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் சில விஷயங்கள் எப்போதும் மாறாது, குறிப்பாக ஏர் இந்தியா ஏர் இந்தியா நிறுவனத்தின் முறையற்ற அணுகுமுறை சோர்வு அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். விக்னேஷ் சிவனின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் ரியாக்ட் செய்து வருகின்றனர். ஆனால் என்ன பிரச்னை என்பதை விக்னேஷ் சிவன் தெளிவாக குறிப்பிட்டால் மட்டுமே வெளியுலகத்திற்குத் தெரியவரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *