மகாராஜா முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வெளியானது அறிவிப்பு

மகாராஜா முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வெளியானது அறிவிப்பு
  • PublishedJune 15, 2024

விஜய் சேதுபதி, வில்லன், அதிரடி ஆக்சன் ஹீரோ, அப்பா ரோல், என எந்த கதாபாத்திரம் என்றாலும் அது விஜய் சேதுபதிக்கு மட்டும் 10 பொருத்தங்களும் பொருந்திவிடுகிறது.

இந்த மாயாஜாலம் தான், விஜய் சேதுபதியின் சினிமா வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாகவும் பார்க்கப்படுகிறது. அதை போல் எந்த ஒரு தருணத்திலும் ஓவர் எமோஷனை வெளிப்படுத்தாமல்… எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்துவதில் கிங்காக இருப்பவர் விஜய் சேதுபதி.

இவரின் 50 ஆவது படமான ‘மகாராஜா’ ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று வெளியானது. இந்த படத்தில் முடி திருத்தும் தொழிலாளியாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இப்படத்தின் ட்ரெய்லரே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், நேற்று வெளியான இந்த திரைப்படம் தொடர்ந்து ரசிகர்களின் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

‘மகாராஜா’ படத்தை குரங்கு பொம்மை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நித்திலன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி உடன் அபிராமி, மம்தா மோகன்தாஸ், நட்டி நட்ராஜ், பாலிவுட் நடிகரும் இயக்குனருமான அனுராக் காஷ்யாப் போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது.

பொதுவாக பல நடிகர்களின் 50வது படம், 100-ஆவது படம் போன்றவை மிகப்பெரும் தோல்வி படங்களாக அமைந்து விடும். இதற்கு காரணம் அந்த படத்தின் மீது ரசிகர்கள் வைக்கும் எதிர்பார்ப்பு எனலாம். ஆனால் இந்த முறை விஜய் சேதுபதிக்கு மகாராஜா திரைப்படம் வெற்றி படமாக அமைந்துள்ளது என ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

முதல் நாளிலேயே இப்படம் உலக அளவில் சுமார் 7 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சனி, ஞாயிறு, விடுமுறை என்பதாலும் திங்கட்கிழமை பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை என்பதாலும் வசூல் எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *