கல்கி முதல் நாள் வசூல் கணிப்பு வெளியாகி உள்ளது – வரலாறு படைப்பாரா பிரபாஸ்?

கல்கி முதல் நாள் வசூல் கணிப்பு வெளியாகி உள்ளது – வரலாறு படைப்பாரா பிரபாஸ்?
  • PublishedJune 26, 2024

இந்திய சினிமாவிலேயே இதுவரை எந்த ஒரு படமும் செய்யாத அளவுக்கு முதல் நாள் வசூலை பிரபாஸ் நடித்துள்ள கல்கி 2898 ஏடி திரைப்படம் செய்ய உள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலக அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ஏற்கனவே நார்த் அமெரிக்கா உள்ளிட்ட ஓவர்சீஸில் ப்ரீ புக்கிங் மிகப்பெரிய அளவில் உள்ளநிலையில் இந்தியாவிலும் தொடர்ந்து படக்குழு செய்துவரும் புரமோஷன் காரணமாக படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் முதல் நாளில் 142 கோடி வசூல் செய்தது

பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் திரைப்படம் 165.3 கோடி ரூபாய் முதல் நாளில் வசூல் செய்தது.

பாகுபலி 2 திரைப்படம் 21.5 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது

ஆர்ஆர்ஆர் திரைப்படம் 223 கோடி வசூலை முதல் நாளில் பெற்றுள்ளது.

இந்நிலையில், பிரபாஸின் கல்கி திரைப்படம் ஆர்ஆர்ஆர் படத்தின் வசூலை முறியடிக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

அதிகபட்சம் 200 கோடி ரூபாய் வரை முதல் நாள் வசூல் ஈட்டும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன.

ஆந்திரா, தெலங்கானா மற்றும் மும்பை உள்ளிட்ட இடங்களில் கல்கி படத்துக்கு பல திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் போர்டு போட்டுள்ளனர். தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் சுமாரான ஓபனிங்கே இதுவரை உள்ளது.

படம் வெளியான பின்னர் பாசிட்டிவ் டாக் வந்தால் மிகப்பெரிய வசூல் வேட்டையை கல்கி 2898 ஏடி படம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *