கல்கி படம் புரியனும்னா முதல்ல இது தெரிஞ்சாகனும்… உங்களில் யாருக்கு இது தெரியும்?

கல்கி படம் புரியனும்னா முதல்ல இது தெரிஞ்சாகனும்… உங்களில் யாருக்கு இது தெரியும்?
  • PublishedJune 27, 2024

கல்கி படம் பார்க்கப்போறீங்களா? அப்போ முதல்ல இந்த படத்தில் அமிதாப் பச்சன் ஏற்றிருக்கும் அஸ்வத்தாமன் கதாப்பாத்திரம் பற்றி நீங்கள் அறிந்துகொள்வது மிகவும் முக்கியமானது.

அஸ்வத்தாமன் கதாப்பாத்திரம் எந்ந இதிகாசத்தில் உள்ளது என்பதாவது உங்களுக்கு தெரியுமா?

அஸ்வத்தாமன் என்ற கதாப்பாத்திரம் மகாபாரதத்தில் வருகின்றது. அதாவது மகாபாரதத்தில் குரு துரோனாச்சாரியாரின் மகன் தான் இந்த அஸ்வத்தாமன்.

ஆம் மக்களே. இந்த அஸ்வத்தாமனின் கதாப்பாத்திரத்தைத்தான் நம்ம அமிதாப்பச்சன் ஏற்றிருக்கின்றார். அப்போ கல்கி படம் மகாபாரத இதிகாச கதையை மையமாக வைத்து உருவாகியிருக்கின்றது.

மகாபாரத யுத்தத்தில் பஞ்சபாண்டவர்களும், கௌரவர்களுக்கும் இடையே இடம்பெற்ற போரில், கர்ணன், குரு துரோனாச்சாரியார், பீஸ்மர் மற்றும் அஸ்வத்தாமன் முதற்கொண்டு அனைவருமே கௌரவர்களின் பக்கம் தான் நின்றார்கள்.

பாண்டவர்கள் பக்கம் கிருஷ்ணர் மட்டுமே நின்றார். அந்த வகையில் போரின் இறுதியில் பாண்டவர்கள் 100 கௌரவர்களையும் அழித்தார்கள், அவர்களுடன் இருந்த அனைவரையும் அழித்தார்கள். அதில் அஸ்வத்தாமன் மட்டும் எஞ்சியிருந்தான்.

அதேபோல் பாண்டவர்களின் பக்கம் பஞ்ச பாண்டவர்கள், திரௌபதி மற்றும் அர்ஜூனனின் மகன் அபிமன்யுவின் மனைவி மற்றும் அவள் வயிற்றிலுள்ள குழந்தை மட்டுமே உயிர் பிழைத்திருந்தார்கள்.

பாண்டவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்ற உண்மையை உணர்ந்த அஸ்வத்தாமன் அபிமன்யுவின் குழந்தையை அழிக்க அஸ்திரத்தை ஏவினார்.

ஆனால் குழந்தையை கிருஷ்ணன் காப்பாற்றிவிட்டார். ஆனால் அதே நேரத்தில் அஸ்வத்தாமனுக்கு சாபம் ஒன்றையும் கொடுத்தார்.

அந்த சாபம் என்ன தெரியுமா? அந்த சாபத்தினால் தான் இன்றைய கல்கி படத்தில் அஸ்வத்தாமனை கொண்டுவந்திருக்கின்றார் இயக்குனர் நாக் அஷ்வின்.

அந்த சாபம் என்னவென்றால், இந்த சாகாவரம். என்னடா இது சாகாமல் இருப்பது வரம் தானே அது எப்படி சாபம் என்றுதானே யோசிக்குறீங்க.

அப்படி இல்ல. ஒரு கட்டத்திற்கு பிறகு மனிதர்களுக்கு கட்டாயம் மரணம் வேண்டும். இல்லை என்றால் அவன் வாழ்க்கை நரகமாகி விடும். வயதாகி தோல் சுறுங்கி, எழுந்து நடக்கவும் சக்தியின்றி அகோர தோற்றத்தில் வாழ யாருக்குத்தான் விருப்பம்.

அப்படி ஒரு நிலையில், நாம் இறந்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் நம்மை மரணம் நெருங்காது என்றால் அது வரமா சாபமா? இப்ப சொல்லுங்க. வரமா சாபமா? நிச்சயமா அது சாபம் தாங்க. இந்த கேரக்கடர் தான் நம்ம இப்ப பார்க்குற கல்கி படத்தோட அமிதாப்பச்சனின் அஸ்வத்தாமன் பாத்திரம்.

இந்த அஸ்வத்தாமன் கதாப்பாத்திரத்தை நம்ம இயக்குனர் எப்படி பாவித்து இருக்கார் என்பது தான் இந்த படத்தோட டுவிஸ்ட்டு….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *